Editorial / 2024 ஜூலை 11 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
15 வயதும் 10 மாதங்களேயான சிறுமியை, செவ்வாய்க்கிழமை (09) முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்ற இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுமி, சந்தேகநபரான இளைஞனுடன் இதற்கு முன்னர் தப்பியோடியிருந்தார். அச்சிறுமியை மீட்ட பொலிஸார், நன்னடத்தைக்கு உட்படுத்தியிருந்தனர்.
அங்கிருந்து மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்த போது, பிரிதொரு முச்சக்கரவண்டியில் வந்த இளைஞனும் அவருடைய தந்தையும், முச்சக்கரவண்டியை வீதியின் குறுக்காக நிறுத்தி, சிறுமியின் தாயை தள்ளிவிட்டு, அச்சிறுமியை கடத்திச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததை அடுத்து, முச்சக்கரவண்டியின் சாரதியான, இளைஞனின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அவ்விளைஞன் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளார் எனத் தெரிவித்த புத்தல பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
21 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
40 minute ago
49 minute ago