2025 ஜூலை 09, புதன்கிழமை

திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

ஆர்.மகேஸ்வரி   / 2018 நவம்பர் 07 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு, கம்பெரலிய கடன் திட்டம் என்பவற்றிலுள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (7) இடம்பெற்ற வாராந்த  ​அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. கம்பெரலிய போன்ற கடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  இவை இடைநிறுத்தப்பட்டுள்ளதா? இந்த அரசாங்கமும் இதனை முன்னெடுக்குமா?  என ஊடகவியலாளர் ஒருவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க, சில வேலைத்திட்டங்களில் குறைபாடுகள் காணப்பட்டன.அந்த குறைபாடுகள் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பட்டாதாரிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்து ஜனாதிபதி தெளிவான நிலையான உறுதிப்பாட்டில் உள்ளார். அதாவது குறித்த பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விடயத்தில் எந்தவொரு அரசியல் பக்கச்சார்பும் இருக்க கூடாதென, ஒன்றுக்கு பத்து தடவைகள் ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

இதில் அரசியலை இணைத்துக்கொள்வது பட்டதாரிகளை ​அகௌரவப்படுத்தும் நடவடிக்கை என்பதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

எனவே, இதுவரை வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் அரசியல் பக்கசார்பின்றி வழங்கப்பட்டுள்ளனவா என ஆராய வேண்டியுள்ளது.

எனவே இந்த நடவடிக்கை எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படும்.

கம்பெரலிய வேலைத்திட்டம் சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது நடைமுறைப்படுத்தப்படாத இடங்களுக்கு இந்த திட்டத்துக்கான நிதியை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த திட்டத்திலுள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு இந்தத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .