2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தீபாவளிக்கு சலுகைக்கு தடுப்பூசி சான்று கட்டாயம்

Editorial   / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி பண்டிகைக்கு அரசு அறிவிக்கும் சலுகைகள் பெறுவதற்கு தடுப்பூசி சான்றிழ் கட்டாயம் தேவை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக நாளொன்றுக்கு 100 கிலோமீற்றர் தூரம் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய விமானப் படை வீரர்களை ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் தமிழிசை, நேற்று (16) கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

”  நூறு சதவீத தடுப்பூசி போடும் இலக்கை   ஒக்டோபர் 2 ஆம் திகதிக்கு எட்ட திட்டமிட்டுள்ளோம்.  தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த ஏற்பாடு செய்துள்ளேன்.  

  அரசு சலுகைகள், மாணவர்கள் தேர்வு எழுதுவது முதல், தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லையென்றால் அரசின் நலத்திட்டங்கள் போன்றவை கிடைப்பதற்கு இனி கடுமையான பாதிப்பு ஏற்படும். அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .