2025 மே 01, வியாழக்கிழமை

தீவிர சிகிச்சை பிரிவில் தேர்தல்கள் ஆணையாளர்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதியான பின்னர் கண்டியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட போது திடீரென மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால், சுகாதார பிரிவினரால் தெல்தெனிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர், தெல்தெனிய வைத்தியசாலையில் இருந்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமன் ஸ்ரீ ரத்நாயக்கவுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .