2025 ஜூலை 19, சனிக்கிழமை

துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் கைது

Freelancer   / 2025 ஏப்ரல் 29 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஹுங்கல்ல பகுதியில் ஏப்ரல் 17 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை லேலிஹெத்துவ சந்திக்கு அருகில் 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயினுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர், 28 வயதுடைய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்த குற்றச் சம்பவத்தில், இந்த சந்தேக நபர் துப்பாக்கிதாரியாக செயல்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

அஹுங்கல்ல பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X