2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை

Editorial   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

ஹொரவ்பொத்தான, கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரும், கெப்பித்திகொல்லாவ நீதிமன்றத்தால் இன்று (05) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு, கெப்பிட்டிகொல்லாவ நீதவான் எச்.கே.மாலிந்த ஹர்சன த அல்விஸ்  முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இம்மாணவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மரங்களுக்கு இடையில் குளறுபடிகளை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்ந்தமை, தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்த குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

இவற்றில், முதலாம் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு அரச செலவாக தலா 1,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும், நீதவான் கட்டளையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .