2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

‘தூஷண’ இலக்கத்தகடு

Editorial   / 2024 ஜனவரி 19 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன இலக்க தகடுக்கு பதிலாக, தூஷண (இழிமொழி) வார்த்தை எழுதி, அதனை மோட்டார் சைக்கிளின் பின்பக்க, இலக்க தகட்டில் ஒட்டிக்கொண்டு பயணித்த இருவர், வெள்ளிக்கிழ​மை கைது செய்யப்பட்டுள்ளனர் என  பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொரலஸ்கமுவ மற்றும் பெல்லன்வில பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள் பொரலஸ்கமுவ நகரத்தின் ஊடாகவே பயணித்துள்ளது.

பொரலஸ்கமுவ நகர மத்தியில், வௌ்ளிக்கிழமை (19) காலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொரலஸ்கமுவ பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் இருவர், வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் அவதானித்துள்ளனர்.

சந்தேகமடைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டினர், சைகையை மதிக்காத மோட்டார் சைக்கிள் பயணித்தவர்கள், மிகவேகமாக பயணித்துள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்த பொலிஸார், அதனை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அந்த  ​​மோட்டார் சைக்கிளின் இலக்க தகடுக்கு சரியாகவும், பின் இலக்க தகடுக்கு பதிலாக ஆங்கிலத்தில் தூஷண வார்த்தை எழுதப்பட்டிருந்ததும் தெரிந்தது. .

அதன்படி, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை கைது செய்த பொலிஸார், மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.

 சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளின் பின்பக்க இலக்க தகட்டை கழற்றி, ஆங்கிலத்தில் அநாகரீகமாக எழுதி, வேடிக்கை காட்டுவதற்கு சென்றதாக கூறியுள்ளனர்.

இந்த இரண்டு இளைஞர்களும் பல தடவைகள் பொரலஸ்கமுவ நகரத்தின் ஊடாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, கைது செய்யப்பட்ட இருவரும்   நுகேகொட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் மனநல வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .