2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தேன் தேடியோருக்கு கிடைத்த தங்க புதையல்

Editorial   / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொதலக்கூர் கிராமத்தில் ஒரு வனப்பகுதி உள்ளது. பொதலக்கூர் வனப்பகுதியில்  அங்கம்மா கோவிலும் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவில் முறையாக பராமரிக்கப்படாமல் பாதி இடிந்த நிலையில் உள்ளது.

அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த கோவிலின் இடிபாடுகளுக்கு இடையே தேன் கேசரிக்க  சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஒரு பழமையான குடம் புதையலாக கிடைத்துள்ளது. அந்த குடத்தில் தங்க காசுகள், தங்க சங்கிலிகள் என ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்துள்ளன.

தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக தேன் சேகரித்து விற்பனை செய்து வறுமையில் இருந்துள்ளனர் இந்த குடும்பத்தினர். இந்நிலையில் மூன்று இளைஞர்களும் திடீரென்று வசதி வாய்ப்புகளுடன் சுற்ற தொடங்கினர். இதனால் கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு மூன்று பேருக்கும் பணம் எப்படி கிடைத்தது என்று விசாரிக்க துவங்கினர். கிராம மக்கள் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு புதையல் கிடைத்த சம்பவம் வெளியே தெரியவந்தது. யாரோ ஒருவர் பொலிஸில் போட்டுக் கொடுக்க, மூவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் புதையலை சென்னையை சேர்ந்த ஒருவரிடம் மொத்தமாக விற்பனை செய்தது தெரியவந்தது. சென்னைக்கு சென்ற நெல்லூர் பொலிஸார் புதையலை வாங்கிய நபரை பிடித்து மொத்த புதையலையும் பறிமுதல் செய்தனர். 14 இலட்சம் ரூபாய் பணம், 21 பவுன் தங்க ஆபரணங்கள், 436 சிறிய வகை தங்க நாணயங்கள்,63 பெரிய தங்க நாணயங்கள் ஆகியவற்றை  ர் பறிமுதல் செய்துள்ளனர்.

 மேலும் புதையலை விற்று கிடைத்த பணத்தில் இளைஞர்கள் வாங்கிய ஒரு கார், ஆட்டோ ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X