Editorial / 2019 நவம்பர் 02 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது பயன்படுத்தப்படவுள்ள வாக்குச் சீட்டுப் பெட்டிகள், கார்ட்போட்டிலேயே அமைந்திருக்கும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரித்தார்.
எப்போதும் போலல்லாது, இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு, மிக நீளமாக உள்ளமையால், அதிகளவான வாக்குச் சீட்டுப் பெட்டிகள் தேவைப்படவுள்ள நிலையில், செலவைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் மரப்பலகையிலான வாக்குச் சீட்டுப் பெட்டியே பயன்படுத்தப்பட்டது என்றும் இதுவொன்றின் விலை 8,500 ரூபாய் என்றும் தெரிவித்துள்ள அவர், கார்ப்டோர் பெட்டியிலான வாக்குச் சீட்டுப் பெட்டியின் விலை 1,500 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பூட்டுப் போடுவதற்கான வசதியும் காணப்படுவதாகவும் இதன் நான்கு பக்கங்களும் செலோடேப்பினால் ஒட்டப்பட்டு, வாக்களிப்புக்காக வைக்கப்பட்டு, வாக்களிப்பு முடிந்தவுடன், சீட்டு இடும் இடம் முற்றாக சீல் வைக்கப்பட்டு, பிளாஸ்டிக் பையொன்றுக்குள் இடப்பட்டு, பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகிலுள்ள பல நாடுகளில், தேர்தல்களின்போது, வாக்குச் சீட்டுப் பெட்டிகளாக, கார்ட்போர்ட் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026