Editorial / 2025 நவம்பர் 09 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி 26 வயது இளம்பெண். ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 5 மாதத்திற்கு முன்பு 3-வதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு கடந்த 4-ந்திகதி பால் குடித்த சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டதாக அதன் தாய் கூறினார்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது குழந்தை இறந்திருந்தது. குழந்தையின் உடலை உறவினர்கள் புதைத்தனர். இந்த நிலையில் குழந்தையின் தாயின் செல்போனை அவரது கணவர் பார்த்த போது அவர் பக்கத்து வீட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருடன் தனிமையில் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது.
மேலும் இறந்த குழந்தையின் படத்தை அந்த பெண்ணிற்கு குழந்தையின் தாய் அனுப்பி இருந்தது தெரிய வந்தது. இது குறித்து குழந்தையின் தந்தை கெலமங்கலம் பொலிஸில் புகார் அளித்தார்.அதன்பேரில் பொலிஸார் நடத்திய விசாரணையில் குழந்தையின் தாய்க்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் ஓரின சேர்க்கை (லெஸ்பியன்) தகாத உறவு இருந்ததும், அதற்கு குழந்தை தடையாக இருந்ததால் குழந்தையின் மூக்கை பிடித்து அதன் தாயே மூச்சு திணறடித்து கொன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தையின் தாய், அவரது லெஸ்பியன் ஜோடியான இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த குழந்தை இருப்பதால் என்னுடன் நீ பழகுவதில்லை என லெஸ்பியன் ஜோடி கூறியதால், தாயே குழந்தையை கொன்றது தெரிய வந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி பிரேத பரிசோதனை குழுவினர் பேராசிரியர் டாக்டர் தண்டர்சிப் தலைமையில் நேற்று காலை கெலமங்கலம் வந்தனர். அவர்கள் குழந்தை புதைக்கப்பட்ட இடத்திற்கு போலீசாருடன் சென்றனர். அங்கு குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. இதையொட்டி அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
17 minute ago
23 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
2 hours ago
2 hours ago