2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாணய நிதிய ஒப்பந்தம் என்ன?: தினேஷ்

Thipaan   / 2016 மார்ச் 08 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது போல, பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகங்கொடுத்துள்ளது என்று கூறிய கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பில் பிரதமர் ஒன்றுமே கூறவில்லை. அந்த நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் கூறுமாறு வலியுறுத்தினார். 

பிரதமரின் விசேட கூற்றையடுத்து எழுந்துநின்ற தினேஷ் எம்.பி, 'அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் வாங்கவிருக்கிறது. அதற்காக, அந்நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் என்ன?' என்று வினவினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம், 1 டொலரைக் கூட கடனாகக் கேட்கவில்லை. புதிய வரி விதிப்புரைக்கான ஆலோசனைகளை வழங்குமாறே கோரியுள்ளோம். உலகப் பொருளாதாரத்தில் பிரச்சினைகள், நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காவிடின், நாம் இவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .