2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்து விஜயத்தை முடித்துகொண்டு டெல்லிக்கு பயணமானார் பிரதமர் ரணில்

Gavitha   / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரிலிருந்து அழகன் கனகராஜ்

நியூசிலாந்துக்கான நான்கு நாள் விஜயத்தை முடித்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதுடெல்லிக்குப் பயணமானார்.   

நியூசிலாந்திலிருந்து, சிங்கப்பூருக்கு, நேற்றுத் திங்கட்கிழமை பயணமான அவர், அங்கிருந்தே புதுடெல்லிக்கு பயணமாகியுள்ளார்.   

இந்த விஜ­யத்தின் போது, இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி மற்றும் இந்­திய வர்த்­தக அமைச்சர், வெளிவி­வ­கார அமைச்சர் உள்­ளிட்­டோ­ரையும் சந்­திக்கும் பிரதமர், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.   இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கும் இ­டையில் செய்து கொள்­ளப்­படவுள்ள “எட்கா” ஒப்பந்தம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­திய விஜ­யத்­தின்­போது
பேச்­சு வார்த்தைநடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இரண்டு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார, கலாசார உறவுகளைப் பலப்படுத்துதல், இந்திய முதலீடுகளை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியாவுக்கான இரண்டாவது விஜயத்தை, பிரதமர் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .