2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பேன்: ஜனாதிபதி

Kanagaraj   / 2015 நவம்பர் 12 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த மாதுலுவாவே சோபித தேரர் எதிர்பார்த்த நல்லாட்சி மற்றும் நியாயமான சமூகத்தை உறுவாக்குவதற்கு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். அவரது எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 சோபித தேரரின் பூதவுடல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைதானத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை மாலை அக்கினியுடன் சங்கமமானது.

அதற்கு முன்னர் இடம்பெற்ற இறுதி நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மாதுலுவாவே சோபித தேரரின் மறைவு எனக்கும் இங்கிருக்கின்ற உங்களுக்கும் மட்டும் சோகமானது அல்ல. முழு நாட்டுக்கும் சோகமானதாகும்.

அவர் எதிர்பார்த்தது எங்களுக்கிடையில் இணைந்துள்ளது. கடந்த ஜனவரி 8ஆம் திகதி உருவான நல்லாட்சிக்காக அவர், அரும்பாடுபட்டு உழைத்தவர். அவருடைய எதிர்ப்பார்ப்பான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நான் ஒழிப்பேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X