2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை படகுச் சேவை நிறுத்தப்பட்டது

Freelancer   / 2025 ஒக்டோபர் 27 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான படகு சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை முன்னறிவிப்பைக் காரணம் காட்டி, அக்டோபர் 26 முதல் 28 வரை திட்டமிடப்பட்ட பயணங்களை ரத்து செய்வதாக சுபம் படகு நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் டிசம்பரில் குறித்த படகின் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைப்பட்ட காலத்தில் படகின் இருக்கைகளை 150 இலிருந்து 186 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக சுபம் படகு நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் பொன்னுசாமி இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .