R.Tharaniya / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெதர்லாந்து இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ Wiebe Jakob De Boer அவர்கள், செவ்வாய்க்கிழமை (02) அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.
பல தசாப்த கால இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நீண்டகால உறவு குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இரு தரப்பினரும் இந்த பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினர்.
சமீபத்திய அனர்த்தத்திலிருந்து இலங்கை மீண்டு வர ஆரம்பித்திருக்கும் இந்தச் சவாலான காலப்பகுதியில், இரு நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அனர்த்த பாதிப்புகளைக் குறைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து பிரதமரும் தூதுவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உறுதியான மீள்கட்டுமானம், மேம்பட்ட நீண்டகால திட்டமிடல் மற்றும் தேவைப்படும் உதவிகள் ஆகியன குறித்தும் அவர்கள் இதன்போது கவனம் செலுத்தினார்கள்.
இலங்கையில் சேதமடைந்த பல பாலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அவசரத் தேவை ஒரு முக்கியத் தேவையாக இருப்பதால், நாடு முழுவதும் உள்ள அத்தகைய பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்க நெதர்லாந்து விரும்புவதாக தூதுவர் தெரிவித்தார்.
மேம்பட்ட வெள்ள முகாமைத்துவம், இலக்கு வைக்கப்பட்ட முதலீடுகள் மற்றும் உள்ளக அபிவிருத்தி போன்ற துறைகளில் கூட்டு முயற்சிகள் நிலையான முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்தச் சந்திப்பில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சப்புத்தந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி. சாகரிகா போகாவத்த, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் திவங்க அத்துரலிய ஆகியோர் இலங்கைத் தூதுக்குழுவில் இடம்பெற்றனர்.

6 minute ago
13 minute ago
15 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
15 minute ago
34 minute ago