2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

“நான் கர்ப்பமாகி ஒரு குழந்தையை சுமக்க விரும்பல”

Editorial   / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக விளங்கும் சன்னி லியோன், 2012-ஆம் ஆண்டு வெளிவந்த ஜிஸம் 2 திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் பல ஹிந்தி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழிலும் நடிகர் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு புகழ் பெற்றார். சன்னி லியோன், 2011-ஆம் ஆண்டு நடிகர் டேனியல் வெபருடன் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் 2017-ஆம் ஆண்டு நிஷா என்ற இரண்டு வயது பெண் குழந்தையை தத்தெடுத்தனர். பின்னர் 2018-ஆம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் நோவா மற்றும் ஆசர் என்ற இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோராகினர்.

இதனால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் சன்னி லியோன், குழந்தைகளை வளர்ப்பதில் தனக்கு கிடைத்த அனுபவங்களை பல நேர்காணல்களில் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், “நான் கர்ப்பமாகி என் வயிற்றில் குழந்தையை சுமக்க விரும்பவில்லை. நீண்ட நாட்களாகவே குழந்தைகளை தத்தெடுப்பது பற்றிய எண்ணம் இருந்தது. செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை எங்களுக்கு உதவவில்லை. அதனால் குழந்தை தத்தெடுப்புக்கு விண்ணப்பித்து, முதலில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தோம்.

அதன் பிறகு வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற முடிவு செய்தோம்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த வெளிப்படையான பதில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .