2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் ஆலயத்துக்கு வெடி குண்டு மிரட்டல்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வெடி குண்டு இருக்கின்றது என அநாமதேய தொலைபேசி அறிவிப்பு வந்ததால் அங்கு சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் ஆலயத்தில் வெடி குண்டு இருக்கின்றது என அநாமதேய தொலைபேசி அறிவிப்பு வந்ததால் நேற்று அங்கு சிறிது நேரம் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

காலையில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் சகிதம் சோதனையில் ஈடுபட்டு எந்தவிதமான ஆபத்தை ஏற்படுத்தும் வெடிபொருள்களும் இல்லை எனபதனை உறுதி செய்தனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X