2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’நாட்டின் எந்தவோர் இடத்துக்கும் 12 மணிநேரத்தில் மரக்கறி விநியோகம்’

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலும் மரக்கறிகளை விநியோகிக்கும் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், சுமார் 12 மணிநேரத்துக்குள், நாட்டின் எந்தவொரு பிரதேச செயலகத்துக்கும், தம்புளையிலிருந்து மரக்கறிகளை விநியோகிக்க முடியுமென்று, தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் கிருஷ்டி விஜேரத்ன தெரிவித்தார்.

பிரதேச செயலகங்கள் ஊடாக மரக்கறிகளை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் கருத்துரைத்த அவர், தத்தமது பிரதேச செயலகங்களுக்குச் சென்று, தங்களுக்குத் தேவையான மரக்கறிகள் தொடர்பில் விண்ணப்பித்தால், அந்த மரக்கறிகள், குறித்த பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமென்றார்.

இவ்வாறு மரக்கறிகளுக்கான விடுக்கப்படும் மனுக்கள், மின்னஞ்சல் ஊடாகவோ தொலைநகல் ஊடாகவோ, தம்புளையிலுள்ள கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன்படி, தம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் ஊடாக, விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டு, 12 மணி நேரங்களுக்குள் அந்த மரக்கறிகள் கிடைக்கச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகளும் வியாபாரிகளும், தங்களுடைய கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .