Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்ன நடந்தாலும் நாட்டை மூடுவதில்லை என்ற பிடிவாதமான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு மற்றும் கோவிட் தடுப்பு செயலணி ஆகியவற்றின் பரிந்துரைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
உலகில் கொரோனா தொற்று நோய்க்கு மூன்று தீர்வுகள் இருப்பதாக தெரிவித்த அமைச்சர்,
40 முதல் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை வழங்குதல் மற்றும் நாடு முழுமையாக திறத்தல் மற்றும் போதிய எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் நாட்டை ஓரளவு திறப்பது ஆகியவையே முறைகள் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை மூன்றாவது முறையைப் பின்பற்றுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago
40 minute ago
54 minute ago