2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

நான்கு அமைச்சர்களின் அமைச்சுக்களில் மாற்றம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 14 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு அமைச்சரவை அமைச்சர்களின் அமைச்சுக்களை மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் அமைச்சுக்களே மாற்றப்படவுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டலஸ் அழகப்பெரும வெகுஜன ஊடக அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்கள் என்று அறிய முடிகிறது. 

இந்த அமைச்சரவை மாற்றம் நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .