Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானச் சீட்டுகளை கொள்வனவு செய்ய முடியாமல், குவைட் நாட்டுக்கு பணிபுரியச் சென்ற 30 பணியாளர்கள் தங்கியிருப்பதாக, நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து பொய்யானதென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
30 இலங்கைப் பணியாளர்கள் குவைட்டில் விமான டிக்கட்டை கொள்வனவு செய்ய முடியாத நிலையில், தங்கியிருப்பதாக குவைட்டுக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தன்னிடம் தெரிவித்ததாக நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் குவைட்டிலுள்ள இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியத்துடன் தான் உரையாடியதாகவும் நாமல் தெரிவிக்கும் வகையிலான எந்த சம்பவமும் அங்கு இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .