Editorial / 2019 ஜூலை 07 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 5ஆம் திகதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை, மீண்டும் நாளையிலிருந்து ஆரம்பிக்கப்படுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாள்களாக ஒரு நாள் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் , ஒருநாள் சேவைக்காக பணம் வழங்கியவர்களுக்கு, சாதாரண கட்டணங்களின் கீழ் நாளைய தினம் அடையாள அட்டைகள் வழங்கப்படுமென்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக, குறித்த 2 நாள்களிலும் விண்ணப்பங்களை கையளித்தவர்களுக்கு இலவசமாக அடையாள அட்டை வழங்கப்படுமென, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
குறித்த 2 நாள்களிலும் 2000 விண்ணப்பங்கள் கையளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026