Freelancer / 2022 ஜனவரி 23 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகம கடற்கரையில் நீராடச் சென்ற 12 வயது மற்றும் 16 வயதுடைய சிறுமிகள் இருவர் காணாமல் போயுள்ளதுடன், மேலும் இருவர் உயிர் பிழைத்துள்ளனர் என்று வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு உறவினர்கள் இந்த விபத்தில் சிக்கியதுடன், வெலிகம முதுகமுவ மற்றும் பத்தேகம பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.
கடலில் நீராடச் சென்ற உறவினர்கள் நால்வரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அருகில் இருந்த இரு இளைஞர்கள் உட்பட சிலரால் சிறுமியொருவரும் யுவதியும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதுகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமிகள், பூப்புனித நீராட்டு விழா விருந்தொன்றுக்கு சென்றிருந்த நிலையில், அவரது உறவினர்களுடன் கெப் ஒன்றில் கடலில் நீராடுவதற்கு வந்துள்ளனர்.
உயிர் பிழைத்த இருவரும் வெலிகம வலான அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
14 மற்றும் 21 வயதுடைய இருவரில் ஒருவரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடலில் காணாமல் போன இரு சிறுமிகளை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026