2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நீரில் மூழ்கிய 6 பேர் மீட்பு

J.A. George   / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற 6 பேர், அலையில்  சிக்கி அடித்துச் செல்லப்பட்ட போது, ​​பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் இவ்வாறு உயிர் பிழைத்துள்ளனர்.

நேற்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களை காப்பாற்றிய உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள், அவர்களுக்கு முதலுதவி செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த அனர்த்த்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X