Editorial / 2019 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
மழை காரணமாக, நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கு கிடைத்த நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதற்கமைய, காசல்ரீ, மவுஸாகலை, விக்டோரியா, ரந்தெனிகலை, கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நூற்றுக்கு 45 சதவீதமாக காணப்படுகின்றது.
கடந்த நாட்களில் நிலவிய வறட்சியான வானிலை காரணமாக நீர்மின் உற்பத்தி 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தபோதும் தற்போது 25 சதவீதம் முதல் 30 சதவீதம் ஆக உயர்ந்துள்ளதாக சுலக்ஷன ஜயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago