Editorial / 2019 நவம்பர் 01 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாயிகளுக்கு ஒரு கிலோகிராம் நெல்லுக்கு, நிலையான விலையொன்றை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்ற, பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த அரசாங்கங்களில், கம்பனிகளுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து காணிகளையும் கைப்பற்றி விவசாயிகளுக்கு மீண்டும் வழங்கப்படுமெனத் தெரிவித்த அவர், எமது நாட்டில் தற்போது 11 சதவீதமான விவசாய நிலங்களே இருக்கின்றன. இவையும் இல்லாமல் போனால் என்ன பண்ணுவதென வினவினார்.
அதன் காரணமாக பயிர்ச் செய்கை நிலம் எங்குள்ளது? வனப்பகுதி எங்குள்ளது? குடியிருப்பு பகுதி எங்குள்ளது? இவை அனைத்தும் தொடர்பில் சிந்தித்து காணி பயன்பாட்டு திட்டமொன்று இந்நாட்டில் ஸ்தாபிக்கப்படும்.
வறுமையை விற்கும் அரசாங்கத்துக்குப் பதிலாக வறுமையைத் தூரமாக்கும் அரசாங்கத்தை அமைப்போம் என அழைப்பு விடுத்த அவர், இப்போது தேர்தல் காலம் வந்துள்ளது. ஆனால் இது தேர்தல் காலமாகத் தெரியவில்லை. நத்தார் காலம் போலவே உள்ளதென கூறுகின்றார். அந்தளவுக்கு சலுகை வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன என்றார்.
எமது நாட்டு மக்களின் வறுமையை வருடக்கணக்கில் விற்றனர். பல வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த மஹிந்த ராஜபக்ஷ,இலவசமாக வழங்குவதாக பட்டியலிடுகின்றார். அவர், அவற்றை அப்போதே வழங்கியிருக்கலாம். எமது வறுமையை விற்பதே அவர்களின் ஒரே குறிக்கோளாகும் என்றார்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026