2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நேற்றைய தொற்றாளர் விவரம்

J.A. George   / 2020 ஒக்டோபர் 09 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தனியில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1053ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நேற்று (08) நாட்டில் 29 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 19 பேர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையை சேர்ந்தவர்கள். 

ஏனைய 10 பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

அவர்களில் 07 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் இருவர் ஈரானில் இருந்தும் ஒருவர் குவைத்தில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 4488 ஆக உயர்ந்துள்ளது.

1197 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 3278 பேர் குணமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X