2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

புகைத்தல் பொருட்களை தடைசெய்யுமாறு ஜனாதிபதிடம் கோரிக்கை

George   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகைத்தல் இல்லாத வலயம் என்று பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் புகைத்தல் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை தடைசெய்யுமாறு நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு, ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

"வைத்தியசாலைச் சுற்றியுள்ள இடங்கள் புகைத்தல் இல்லாத வலயங்களாக பெயரிட அரசாங்கம் தீர்மானித்தது. எனினும் அந்த வலயங்கள் வார்த்தையில் மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கொழும்பு பெரிய வைத்தியசாலையை சுற்றியுள்ள பகுதி புதைத்தல் இல்லாத வலயம் என்று பெயரிடப்பட்டபோதும் அதனைச் சுற்றியுள்ள கடைகளில் புகைத்தல் பொருட்கள் விற்கப்படுகின்றன.

அதன்காரணமாக, புகைத்தல் இல்லாத வலயங்களாக பெயரிடப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தி, சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என அந்த அமைப்பு, ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X