Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைது செய்யப்பட்டுள்ள இருவரை தவிர, ஏனையோர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் இராணுவ வீரரான அநுராதபுரம் அஹயியாகமவைச் சேர்ந்த ஆர். ஏ.இனோன் ரணசிங்க என்பவரை வெளிநாட்டுக்கு செல்வதற்கு இடமளிக்கவேண்டாம் என்றும் அவரது கடவுச்சீட்டை முடக்குமாறும் அநுராதபுரம் பிரதான நீதவான் ஷாந்த கலன்சூரிய, குடிவரவு மற்றும் குடியகல்வு நிர்வாகிக்கு நேற்று வியாழக்கிழமை தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரபல்யமான இந்த இரவு விடுதிக்குள் 24ஆம் திகதி சனிக்கிழமை இரவு 11.45க்கு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களால் அதன் உரிமையாளரான கராத்தே சம்பியன் வசந்த சொய்சா பலியானார். சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 22 பேர் இதுவரையிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .