Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 05 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்கால நிலை குறித்த கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முன்னாள் மேற்கு வங்க ஆளுநரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே.நாராயணன் மீது அந்த அரங்கில் பார்வையாளராக வந்திருந்த பிரபாகரன் என்பவர், தனது காலணியால் பலமாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது பேசிய பிரபாகரன், இலங்கை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து இதுவரை பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
இதனிடையே இந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், பிரபாகரனிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். பிரபாகரன் மீது உள்நோக்கம் கொண்டு தாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை 18ஆவது நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட பிரபாகரனை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மோகனா உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .