Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அது தொடர்பில் அக்கட்சி ஊடக அறிக்கையொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை(20) வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
'தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்குப் பாரிய அளவில் அச்சுறுத்தலாக இருந்த புலிப் பயங்கரவாத அமைப்பை அழித்திருந்தாலும் அது தொடர்பிலான பேச்சு இன்னும் அணைக்கப்படவில்லை.
பயங்கரவாதம் இருந்த காலத்தில் பல அரசியல் கட்சிகள்,அரச சார்பற்ற நிறுவனங்கள் சர்வதேச ரீதியாக பொய்யான வியாக்கியானங்கள் செய்தமையைக் கண்டோம்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட இறுதி யுத்தத்தில், அரச பாதுகாப்புப் பிரிவினரிடம் 11,000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சரணடைந்தனர். அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், பயங்கரவாதக் கொள்கை கொண்ட சில குழுக்களும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், இலங்கை இராணுவத்தினருக்கு மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அவர்களுக்குத் தண்டனை பெற்று கொடுப்பதற்காகவும் கடந்த காலங்களில் செயற்பட்டன.
பெற்றுக் கொடுப்பதற்காகவும் கடந்த காலங்களில் செயற்பட்டன. சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை ஏந்திப் பாதுகாப்புப் படைகள் மற்றும் சாதாரண பொதுமக்களைக் கொன்றொழித்து சொத்துக்களை அழித்த, சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்ட அமைப்பையே எமது படையினர் அழித்தொழித்தனர். அது பாதுகாப்புப் படையினரின் பொறுப்பாகும்.
இறுதி நிமிடம் வரை இராணுவத்துடன் போராடி, தோல்வியின் தருணத்தில் படையினரிடம் சரணடைந்த பயங்கரவாதிகளின் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, எவ்விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான தருணங்களில் உரிய குற்றங்களை இழைத்து சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கூடாது. பொது மன்னிப்பு வழங்குமாறு கோருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டத்தை நிறைவேற்றிய பாதுகாப்புத் தரப்பினருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு முயல்கின்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெத்த புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக உடனடியாக நீதிமன்றத்தில் காரணத்தை முன்வைத்து நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அது உடனடியாக இடம்பெறுவதை பார்ப்பது மக்களின் எதிர்பெதிர்பார்ப்பாகும்.
நல்லாட்சியின் பிரதான பொறுப்பு எல்லோருக்கும் சட்டம் முறையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே தவிர ஒவ்வொரு குழுக்கள் மற்றும் அரசியல் பிரிவினைவாதிகளின் இதயங்களை வெற்றிக் கொள்வதற்காக அல்ல என்பதே எமது நிலைப்பாடாகும்' என இந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago