2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரை நோக்கி குண்டு வீச்சு: பாதாள கோஷ்டியின் சந்தேகநபர் தப்பித்தோட்டம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன், பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் அத்துருகிரிய பிரதேசத்தில் தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேநபர் அவருடைய வீட்டில் இருந்த போது, பொலிஸார் அவரை கைது செய்ய முற்பட்ட வேளையில், பொலிஸாரை நோக்கி குண்டொன்றை வீசியுள்ளார்.

அதனையடுத்து, குறித்த நபர் தப்பிச் செல்ல முயற்சித்த போது, அவரை கைது செய்வதற்காக பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எனினும், அவர் காயங்களுக்குள்ளான நிலையில் தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .