2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பட்டாசு விபத்தில் பலியானோர் விவரம்

Kanagaraj   / 2016 மார்ச் 15 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, கட்டான பகுதியில் உள்ள பட்டாசுக் குடிசையில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தினால், மூவர் உடல் கருகிப் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், இன்று  செவ்வாய்க்கிழமை பிற்பகல் 11.20க்கு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், மட்டக்குளியைச் சேர்ந்த சுதர்ஷன் (22 வயது), பஸ்ஸயைச் சேர்ந்த  சேர்ந்த சூர்யா (21 வயது), பதுளையை சேர்ந்த சிவபாலன் (21 வயது) ஆகியோரே சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர்.

கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிம்புலாப்பிட்டிய பிரதேசத்தில், 372/02 என்ற இலக்கத்தைக் கொண்ட விலாசத்தில்,

சுரேஷ் என்ற பெயரில் பட்டாசு தயாரிக்கும் தொழில் குடிசைத் தொழிலாக முன்னெடுக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கடும் எரிகாயங்களுக்கு உள்ளான மூவரும், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .