Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமாவை மிஞ்சும் திருப்பங்களுடன் ஒரு கொடூரமான குற்றம் ஆந்திராவின் பரபரப்பான சாலையொன்றில், அரங்கேறியிருக்கிறது.
இந்தக் கதையின் நாயகன், அல்லது மாறாக, வில்லனாகக் கருதப்படும் லோகேந்திரா, ஒரு சாதாரண மனிதனல்ல. அவனது வாழ்க்கை, ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து, மாமுல் ஆகியவற்றால் நிரம்பியது.
ஆனால், இந்தக் கொலைக்கு காரணம் அவனது கடந்த கால பாவங்கள் அல்ல, வெறும் பத்து ரூபாய் பணப் பிரச்சனைதான் என்பது இந்தக் கதையின் மிகப் பெரிய திருப்பம்.
நடுரோட்டில் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த லோகேந்திராவின் மீது, வேகமாக வந்த ஒரு கார் மோதியது. சாலையில் தடுமாறி விழுந்த அவனை, விபத்து என்று நினைத்து அருகிலிருந்தவர்கள் பதறினர்.
ஆனால், அடுத்த நொடியே காரிலிருந்து இறங்கிய மூன்று பேர் கொண்ட கும்பல், விழுந்து கிடந்த லோகேந்திராவை கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது. கத்திகளால் சகட்டுமேனிக்கு வெட்டி, உயிர் பிரியும் வரை அவர்கள் நிற்கவில்லை.
இறுதியாக, லோகேந்திரா அசைவற்று உயிரிழந்ததை உறுதி செய்துவிட்டு, அந்தக் கும்பல் காரில் சாவகாசமாகக் கிளம்பிச் சென்றது. இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்த மக்கள், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவலர்கள், லோகேந்திராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், லோகேந்திரா ஒரு சாதாரண மனிதன் இல்லை என்பது தெரியவந்தது. கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், மாமுல் ஆகியவற்றில் ஈடுபட்டு, பல வழக்குகளில் தொடர்புடையவன் அவன்.
இவை மட்டுமல்ல, பாலியல் தொழிலாளிகளிடம் அவன் காட்டிய வக்கிரமான நடத்தையும் வெளிச்சத்துக்கு வந்தது. மிகக் கொடூரமாக, ஒரு பாலியல் தொழிலாளியை மிருகத்தனமாகத் தாக்கி, அவரது மார்பகத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் லோகேந்திரா குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
இந்தக் கொலைக்காக அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும், சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, ரவுடிசத்தை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தான்.
லோகேந்திராவின் வாழ்க்கையில் அடுத்த திருப்பம், ஸ்ரீனிவாஸ் ரெட்டி என்பவருடனான சந்திப்பு. ஆட்டோவில் பயணித்த ஸ்ரீனிவாஸ் ரெட்டியிடம், பயணக் கட்டணத்தை விட பத்து ரூபாய் கூடுதலாகக் கேட்டான் லோகேந்திரா.
இதை மறுத்த ஸ்ரீனிவாஸ் உடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் ஸ்ரீனிவாஸை கடுமையாகத் தாக்கிய லோகேந்திரா, பழைய ரவுடிச மனப்பான்மையுடன், அவரைப் பழிவாங்க முடிவு செய்து, இறுதியில் ஸ்ரீனிவாஸைக் கொலை செய்தான்.
இந்தக் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று வந்த பிறகும், லோகேந்திரா ஆட்டோ ஓட்டிக்கொண்டு சாவகாசமாக வாழ்ந்து வந்தான்.
ஆனால், ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் மகன் பாலகிருஷ்ணா ரெட்டி, தனது தந்தையின் கொலையை மறக்கவில்லை. தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியுடன், இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து, ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், நடுரோட்டில் லோகேந்திராவை வெட்டிக் கொலை செய்தான்.
கோழி கிளறிய நிலம் போல, லோகேந்திராவின் உடலை கத்திகளால் கிளறித் தீர்த்து, தனது தந்தையின் மரணத்திற்கு நீதி வழங்கியதாகக் கருதினான் பாலகிருஷ்ணா.
இந்தக் கொடூரமான சம்பவம் ஆந்திர மாநிலத்தை உலுக்கியிருக்கிறது. ஒரு பத்து ரூபாய் பிரச்சனை, ஒரு மனிதனின் உயிரைப் பறித்து, பழிவாங்கல் என்ற வட்டத்தை முடித்திருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .