2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பெண்ணின் தலைமுடியை அறுத்த விவகாரம் : மேலும் இருவர் விளக்கமறியலில்

Janu   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் வைத்து பெண் ஒருவரை தாக்கி, அவரது தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேகநபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் காஞ்சனா டி சில்வா திங்கட்கிழமை (20) பிற்பகல் உத்தரவிட்டார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் மேலும் இரண்டு ஊழியர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள பிரதான சந்தேக நபரான பெண் உட்பட ஐந்து பேரின் விளக்கமறியல், (24) ஆம் திகதி வரை நீடிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .