2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பரந்தன் கெமிக்கல்ஸ் தலைவர் நேசராஜன்

Editorial   / 2025 ஜூன் 24 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியது.

அந்தக் குழு 2025.06.20 ஆம் திகதி பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய தலைமையில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் (ETF) தலைவராக சோமசிறி ஏக்கநாயக்க, இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பீ.ஏ.பி.கே.ஆர். பமுணு ஆரச்சி, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக எம்.ஆர்.எச். சுவர்ணதிலக்க மற்றும் பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனியின் தலைவராக எஸ். நேசராஜன் ஆகியோரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X