2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் மரணம்

Freelancer   / 2024 மார்ச் 21 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (20) கணேமுல்ல சுமேத மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது, ​​சந்தேக நபர் விஷேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கசூடு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேக நபர் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கடந்த 9ஆம் திகதி ஜா-எல, தன்டுகம பஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் 28 வயதான எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் இராணுவ சேவையிலிருந்து தப்பி வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X