Editorial / 2025 ஒக்டோபர் 24 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய. இடத்திற்கு மாற்றக்கோரி பருத்தித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை வெள்ளிக்கிழமை (24) காலை 9:00. மணியளவில் முன்னெடுத்தனர்.
பருத்தித்துறை நவீன சந்தையில் இருந்து பருத்தித்துறை நகரசபை வரை சென்று அங்கு தவிசாளர் மற்றும் செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் சில மணி நேரம் மூடப்பட்டே குறித்த பேரணி. இடம்பெற்றது.
சுமார் 200 வரையானோர் கலந்து கொண்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட மரக்கறி சந்தையை மீண்டும், நவீன சந்தை தொகுதிக்கு மாற்றித்தருமாறு கோஷம் எழுப்பினர்
இதேவேளை குறித்த சந்தையை பழைய இடத்திற்கு மாற்றி தருமாறு மகஜரை வழங்குவதற்கு செயலாளரையும், தவிசாளரையும் நகரசபைக்கு வெளியே வருமாறு வர்த்தகர்களால் கோரப்பட்ட நிலையில் சுமார் நாற்பது நிமிடம் வரை செயலாளர் வெளியே வந்து மகஜரை தவிசாளருடன் இணைந்து பெற்றுக்கொள்ள மறுத்திருந்தார். வர்த்தகர்கள் விடாப்பிடியாக செயலாளர் வெளியே வரவில்லை எனில் தாம் நகரசபை வாயிலை விட்டு எழுந்திருக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க நகர சபை செயலாளர் வெளியே வந்து மகஜரை தவிசாளருடன் இணைந்து பெற்றுக் கொள்ள வருமாறு சமரசத்திம் ஈடுபட்ட நிலையில் இணங்கிய செயலாளர் தவிசாளருடன் இணைந்து மகஜரை பெற்றுக்கொண்டார்.
மகஜரை பெற்றுக்கொண்ட பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வர்த்தகர்களின் கோரிக்கையை மதித்து தாம் விரைவில் சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுவதற்குரிய ஆய்வுக்குழு அறிக்கை கிடைக்கப்பெற்றதும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் நிறைவு பெற்றது.

30 minute ago
44 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
44 minute ago
59 minute ago
1 hours ago