Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 18 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை 6,618ஆல் அதிகரித்துள்ளதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
உயர்கல்வி அமைச்சைத் தான் பொறுப்பேற்கும் போது 24,540 என்ற எண்ணிக்கையான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றனர் என்றும் அதனை இப்போது 31,158ஆக அதிகரிக்கச செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், உயர் கல்வித்துறையில் இந்த 04 வருட காலத்துக்குள் பொன்னான ஒரு யுகத்தை உருவாக்கி, அதன் வளர்ச்சிக்காக மட்டும் 60 பில்லியன் அரசாங்கம் செலவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் திறப்புவிழா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், குருவிட்ட ஏதன்டவல பிரதேசத்தில் நேற்று (17) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கையை அதிகரித்துள்ளமையானது, கல்வித்துறையில் இந்நாடு அடைந்து வருகின்ற வெற்றிக்கு சான்றாகுமென்றும் இது மாற்றத்துக்குரிய யுகம் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, பலக்லைக்கழக மாணவர்களுக்குத் தேவையான வளங்களையும், விரிவுரையாளர்களையும் தம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளதாகவும் அதேபோல் 16 கற்கைநெறிகளுக்கான புதிய பீடங்களை 4 வருடங்களுக்குள் தம்மால் நிறுவ முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீதியமைச்சர் தலதா அத்துகோரல, சப்ரகமுவ பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கம்புறுக்கமுவே வஜிர, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், இராஜாங்க அமைச்சர் கருனாரத்ன பரணவிதாரன, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.ஏ.விஜயதுங்க, சேஷா விதானகே, பேராசிரியர் சுனில் சாந்த, அமைச்சின் செயலாளர் எம்.எம்.ஜி.மாயாதுன்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago