2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பழைய தொழில் செய்தால் வழக்குத்தான்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வாழமுடியாமையினால் விபசாரத்தில் ஈடுபடுவதாக பெண்கள் சிலர், ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர். அவ்வாறு கூறி அத்தொழிலில் ஈடுபட்டால், அவர்களுக்குச் சட்ட அடிப்படையில் மன்னிப்பு வழங்க முடியாது' என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

'இலங்கைச் சட்டத்தின் பிரகாரம், விபசாரம் செய்தல் மற்றும் விபசார நிலையங்களை நடத்துதல் என்பன குற்றமாகும். அவ்வாறான செயற்பாடுகளில் யாரும் ஈடுபடமுடியாது' என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.

விபசாரத்தில் ஈடுபடுவோர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர். அவ்வாறு கைதானோர், வாழமுடியாமல் இத்தொழிலுக்கு வந்ததாகக் கூறினால் கூட அவர்கள், நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

தண்டனைக் கோவைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பிரகாரம், 18 வயதுக்குக் குறைந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துதல் மற்றும் பலவந்தமாகப் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தல் என்பன, முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X