Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜூலை 05 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாரதிய ஜனத்தாக கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் மதுபோதையில் இருந்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நபர், பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்தார். இந்த காணொளி கடும் கண்டனங்களுடன் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவர், பாஜக இளைஞரணியை சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், பரவேஷ் சுக்லாவை கைது செய்த காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .