S.Renuka / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார் என்பதை அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இறக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.
இலங்கையின் பைலா இசைத் துறையில் மிகவும் முக்கியமான ஒருவராக சமன் டி சில்வா திகழ்ந்தவர்.
1975இல் தனது இசை வாழ்க்கையை ஆரம்பித்த இவர், கடந்த 4 தசாப்தங்களுக்கும் மேலாக தனது ரசிகர்களுக்காக சிறந்த பாடல்களை பாடி வந்துள்ளார்.
இலங்கை இசையை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு சென்று, உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்துவதில் தனது வாழ்க்கையை கழித்துள்ளார்.
அவர் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago