2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாடலாசிரியர் புலமைப்பித்தன் காலமானார்

A.K.M. Ramzy   / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

சினிமா பாடலாசிரியரும், தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்த புலமைப்பித்தன் வயது மூப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தனது 86ஆவது வயதில் இன்று காலமானார்.

சினிமா பாடலாசிரான கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த வாரம் சென்னை, அடையாறில் உள்ள போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக உறுப்புகள் செயல்பாடு குறைவு ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர், இன்று  8 ஆம் திகதி காலை 9.33 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .