Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு படைகளில் கடைமையாற்றும் மற்றும் படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், தேர்தலில் வாக்களிப்பதை தவிர ஏனைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றையும் (29) வெளியிட்டுள்ளது.
தற்போது சேவையில் உள்ள மற்றும் ஓய்வுப்பெற்றுள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது சீருடையில் இருக்கும் புகைப்படங்களை பிரசுரித்து அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அந்த அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அதனைபோல, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமது புகைப்படங்களை பயன்படுத்த இடமளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸார் பக்கச்சார்ப்பின்றி நடந்துகொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026