S.Renuka / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாம்புக்கடியால் ஏற்படும் விஷம் தடுக்கக்கூடியதாகவும், சிகிச்சை அளிக்கக்கூடியதாகவும் இருந்தபோதிலும், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒருவர் மரணிக்கிறார்.
2026ஆம் ஆண்டு உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினத்தைக் குறிக்கும் வகையில் Strike Out Snakebite அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 1.38 இலட்சம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பதாக Strike Out Snakebite அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.
இதில் பாதி உயிரிழப்புகள் இந்தியாவிலேயே நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒருவர் பாம்பு கடியால் மரணமடைவதாக கூறப்படுகிறது. பாம்புக்கடி பாதிப்பு என்பது ஒரு சமூக சமத்துவமின்மையின் அடையாளம் என்றும், இதில் உயிர் காக்கும் சிகிச்சைகள் வசதி படைத்தவர்களுக்கான சலுகையாகவே இன்றுவரை நீடிப்பதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
விலை உயர்வு, பற்றாக்குறை, விஷ எதிர்ப்பு பொருட்களைப் பெற நீண்ட பயணங்கள் உள்ளிட்ட காரணங்களால் மரணங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது.
எளிய முன்னெச்சரிக்கைகள் - பாதுகாப்பான ஆடைகள் மற்றும் உறுதியான காலணிகளை அணிவது, நன்கு கட்டப்பட்ட கொசு வலைகளின் கீழ் உறங்குவது, இரவில் டோர்ச் லைட் ஒன்றை எடுத்துச் செல்வது, மற்றும் பாம்புகள் இருக்கும் இடங்களைத் தவிர்ப்பது போன்றவை பாம்பு கடிக்கும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என அறிவுறுத்தப்படுகிறது.
8 minute ago
13 minute ago
21 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
21 minute ago
37 minute ago