2026 மே 14, வியாழக்கிழமை

பாரிய கடன் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளியா?

Nirosh   / 2021 மே 24 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் இருந்துப் பாரியளவிலானக் கடன்களைப் பெற்று, இனி நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படமாட்டாதென ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன் வலைக்குள் சிக்காது, புதிய மொடல் (மாதிரி) ஒன்றுக்கு மெதுவாகச் செல்ல வேண்டுமெனவும், நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உள்ளூரிலேயே நிதித் திரட்டப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிய ஆகியவற்றிடமிருந்து இலங்கை மேலும் பல உதவிகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்து அவற்றைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், இதற்கடையில் கடந்த வருடத்தைப்போல இந்த வருடமும் எந்தவொரு பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் நாட்டில் முன்னெடுக்கப்படாதெனவும் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு என்பவற்றிலிருந்து மீள்வதற்கு விவசாயத்திலிருந்து உடனடியான மாற்றங்கள் வர வேண்டுமெனவும், விவசாயம், கால்நடை, மீன்பிடி ஆகியத் துறைகள் தொடர்பில் சிந்தித்து, உலகின் பல நாடுகளில் உணவுத் தேவைக் காணப்படுவதால் இவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

சீனா அல்லது இந்தியாவிடமிருந்து நிதியுதவிகளைப் பெற்று முன்னெடுக்கப்படும் ரயில்வே அல்லது நெடுஞ்சாலைகள் திட்டங்களை நம்பிக்கொண்டிருக்காது, சிங்கப்பூர் செய்ததைப்போல ஓர் உலகளாவியக் கதையை இலங்கை உருவாக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .