2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

பியல் திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி பிரிவின் முன்னாள் பிரதானி பியல் திசாநாயக்கவை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு, வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனமொன்றினால் வழங்கப்படவிருந்த 1 மில்லியன் டொலருக்கு அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், நேற்று மாலை குற்றப்புலனாய் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது பியல் திசாநாயக்கவை அடுத்த மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X