2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘பிரசாரத்துக்கு வலுசேர்க்கவே கருணா கருத்து வெளியிடுகிறார்’

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்பன்பில உள்ளிட்ட இனவாதத்தை மூலதனமாகக்கொண்டு அரசியல் நடத்துபவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே,  கருணா அம்மான் கருத்து வெளியிட்டுள்ளாரென,  ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேசிய அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான முஜிபுர் ரஹூமான் குற்றம் சுமத்தினார்.  

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே,  அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். 

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், கருணா அம்மானுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் தொடர்பில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார். இது ஒரு ஏமாற்று பேச்சாகும் எனக் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .