Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூலை 14 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மாகாண, பிராந்திய மற்றும் பிரதேச மட்டத்திலான கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கிழக்கு மாகாணத்திற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நேற்று (13) கிழக்கு மாகாண கல்வி திணைக்கள கேட்போர் கூடத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
தற்போதைய கல்வி முறையில் மாற்றம் தேவை எனவும், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் அதிபர் மற்றும் கல்வி நிர்வாக வெற்றிடங்கள் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவை தீர்க்கப்பட வேண்டும் என்றும், இந்தக் கல்விச் சீர்திருத்தத்தை தனியாக பார்க்காமல் முழுமையான செயல்முறையாகப் பார்க்க வேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். (a)
7 minute ago
14 minute ago
34 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
34 minute ago
54 minute ago