2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஆட்டையை போட்ட கொட்டகலை பெண் மாட்டினார்

Editorial   / 2025 ஜூலை 30 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலையைச் சேர்ந்த 43 வயதுடைய அலுவலக ஊழியர் ஒருவர், 35 நீர் வடிகட்டிகள் மற்றும் 13 தொலைக்காட்சிகள் உள்ளிட்ட அலுவலகப் பொருட்களைத் திருடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் மதிப்பு   7.03 மில்லியன் ரூபாகும் கொட்டகலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான அந்த பெண், அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர், தற்போது விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக களனி சிறப்புப் பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .